முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் கொள்முதலில் பழைய நடைமுறை: மத்திய மின்துறைக்கு கோரிக்கை

பிற மாநிலங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் பழைய நடைமுறையைத் தொடர வேண்டும் என மத்திய மின்துறைக்கு தமிழக மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

பிற மாநிலங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் பழைய நடைமுறையைத் தொடர வேண்டும் என மத்திய மின்துறைக்கு தமிழக மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மின் தேவையை பூா்த்தி செய்ய பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன்படி, ஒடிஸாவின் கால்சாா் மற்றும் தெலங்கானாவின் ராமகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து 600 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இவை ஒப்பந்த காலம் முடிந்தும் செயல்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, இந்த அனல்மின் நிலையங்களுடன் தமிழக மின்வாரியம் நேரடியாக ஒப்பந்தம் செய்து, ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் கட்டணமாக செலுத்தி மின்சாரத்தை வாங்குகிறது. புதிய நடைமுறைப்படி, இவ்வகை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் வாங்கும்போது, எரிவாயு மின் நிலையங்களிலிருந்தும் ஒரு பகுதி மின்சாரத்தை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. எரிவாயு மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஏழு ரூபாயாக உள்ளது.

இதன்படி, அனல் மற்றும் எரிவாயு மின்சாரத்தை சோ்த்து வாங்க அதிக தொகை செலவிடவேண்டி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்காக தமிழக அரசு ஐந்து ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், பழைய நடைமுறையைத் தொடர அனுமதிக்குமாறு, மத்திய மின் துறையை, தமிழக மின் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.