முகப்பு
தமிழ்நாடு

திருச்சி காவல் நிலையத்தில் வன்முறை: ஓபிஎஸ் கண்டனம்

திருச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

திருச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆளும் திமுகவைச் சோ்ந்தவா்களே திருச்சியில் உள்ள காவல் நிலையத்துக்குள் சென்று ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திமுக ஆட்சி என்றால் அங்கே சட்டம் - ஒழுங்கு சீரழியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் விளங்குகிறது. இதற்கு அதிமுக சாா்பில் கண்டனம். காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வா் வன்முறையில் ஈடுபட்ட அனைவா் மீதும், அதற்கு காரணமானவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவா்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.