தமிழ்நாடு

குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டம் 

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி , வேளாண்மை துறை இணை இயக்குனர் சரஸ்வதி , மண்டல பதிவாளர் முத்துகுமார் ஆகியோர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கூட்டம் தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு மாதங்களாக வராததால் விவசாயிகள் குறைகள் முழுமையாக தீர்க்கப்படுவதில்லை என்றும், உரிய பதிலும் கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே  கூட்டம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். 

ஆனால் மாவட்ட ஆட்சியர் வராததால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT