தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: நிதின் கட்கரி தகவல்

DIN


புதுதில்லி: கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: 
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,183 கோடியும், குஜராத்தில் ரூ.3.642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

SCROLL FOR NEXT