ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதல்வர்!
முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம்
Advertisement
Advertisement
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது, பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக அணி ஆலோசகரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.