தமிழ்நாடு

6 மாத பெண் குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாய்!

DIN

காட்பாடி ரயில் நிலையத்தில் 6 மாதக் குழந்தையை தாயார் விட்டுச்செல்லும் விடியோவை ரயில்வே காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (63) என்பவர் இன்று (03.05.2023) ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடை மேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்த போது அவரிடம் கை குழந்தையுடன் வந்த பெண்மணி ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக்கொள்ளும்படியும், ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  

அதில், ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்து செல்லும் பெண்மணி வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். 

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்பு பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு ஆறு மாத குழந்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT