வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில் மே 9, 10, 16 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: காட்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு தினமும் காலை 9.30 மணிக்கு செல்லும் மெமு விரைவு ரயில் (எண்: 06417) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு பகல் 12.30 மணிக்கு மெமு விரைவு ரயில் (எண்: 06418) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மே 22, 31 மற்றும் ஜூன் 2, 5, 6, 7 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேலூரிலிருந்து அரக்கோணத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு மெமு விரைவு ரயில் (எண்: 06736) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக அரக்கோணத்திலிருந்து வேலூருக்கு பிற்பகல் 2.05 மணிக்கு மெமு விரைவு ரயில் (எண்: 06735) இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மே 9, 10, 16 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.