முகப்பு
தமிழ்நாடு

தி கேரளா ஸ்டோரி படத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி இன்று போராட்டம்!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக திரையரங்குகள் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக திரையரங்குகள் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக திரையரங்குகள் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. 

சென்னை அமைந்தகரையில் உள்ள திரையரங்கிற்கு முன்னதாக நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார். 

முன்னதாக இதுகுறித்து பேசிய சீமான், 'இந்த படத்திற்கு எதற்கு திரையரங்குகளில் பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்? நாங்களே தியேட்டரை முற்றுகையிட்டால் என்ன செய்வீர்கள்? 

இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களின் உணர்வுகளோ, உரிமையோ  தேவையில்லை என்று நினைக்கிறார்கள்' என்று பேசியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →