தமிழ்நாடு

ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகம்: முதல்வர் திறந்து வைத்தார்!

DIN

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பொருள்கள் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், சிவக்குமார், ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.  ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கேற்ப மாறிய திரைப்பட தயாரிப்புக் கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க கார்கள் மற்றும் இரு சக்கரவண்டிகளையும் கொண்ட ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்வர் திறந்து வைத்த ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு  ரூ.200ம், சிறியவர்களுக்கு தலா ரூ.150ம்  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடபழனி ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்துக்கு  செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT