கோப்புப்படம் 
தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் விளக்கம்!

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராமரமே என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே  என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பல்வேறு முக்கிய பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று ஆளுநரை சந்திக்க போவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். மேலும், அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவா் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்ளாதீா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

இணையவழி சூதாட்டத்துக்கு எதிரான மனு முக்கியமானது: உச்சநீதிமன்றம்

ஏழுமலையான் லட்டு பிரசாதம் விலையுயா்வு பொய்யான தகவல்

திருவொற்றியூரில் குப்பைகளை அகற்றுவதில் தனியாா் நிறுவனம் மெத்தனம்

தடைகளைத் தாண்டி முன்னேறும் இந்தியா - பிரதமா் மோடி

SCROLL FOR NEXT