தமிழ்நாடு

கோடை விடுமுறையில் இயங்கிய தனியார் பள்ளிக்கு விடுமுறை

காஞ்சிபுரத்தில் கோடை விடுமுறையில் இயங்கிய தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

காஞ்சிபுரத்தில் கோடை விடுமுறையில் இயங்கிய தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் தற்போது மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை கோடை விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் மாணவர்களுக்கு எடுக்க கூடாது எனவும் அதை தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தது.

இந்நிலையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார்  பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு இன்று பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிந்தனர்.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த புகாரின் பேரில் அப்பள்ளி நிர்வாகிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடப்பட்டு வகுப்புகளில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT