கோப்புப்படம் 
தமிழ்நாடு

விரைவில் சசிகலாவை சந்திப்பேன்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

DIN

கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலில் திடீா் திருப்பமாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனா்.

சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய அவா்கள், அதிமுகவை மீட்டு தொண்டா்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூட்டாகத் தெரிவித்தனா்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு ஓ.பன்னீா்செல்வம், மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் வந்தனா். டி.டி.வி.தினகரனைச் சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் பேசினாா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்  கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த நலனுக்காக ஓ.பன்னீர் செல்வம் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் எனக் கூறிய உதயகுமார் கேள்விக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT