தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! 

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல்பகுதிகில் மோக்கா புயலாக இன்று வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து நாளை வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன்பிறகு வடக்கு -வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக உள்ளடக்கத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா உதாரணம்: ஐ.நா. அதிகாரி

பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி

72 கோயில்கள்..! சபரிமலை பக்தா்களுக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள்! கேஎஸ்ஆா்டிசி அறிமுகம்!

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

SCROLL FOR NEXT