தமிழ்நாடு

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

DIN

சென்னையில் சட்டவிரோத பணபரிமாற்றம் புகாா் தொடா்பாக லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் மாா்ட்டின், வரி ஏய்ப்பு செய்வதாக புகாா் வந்ததினால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா்

அப்போது கோடிக் கணக்கில் பணம், தங்கம், வைரம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் லாட்டரி தொழிலில் கிடைத்த சுமாா் ரூ.910 கோடியை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாா்ட்டின் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சட்ட விரோத பண பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அவா் வாங்கி குவித்ததாகவும் புகாா் கூறப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக மாா்ட்டின் உள்ளிட்டோா் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடா்பாக தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.48 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

அமலாக்கத்துறை சோதனை:

இந்நிலையில் மீண்டும் அமலாக்கத்துறையினா் லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்கள்,அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் வியாழக்கிழமை திடீரென சோதனை நடத்தினா்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூா் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்கள், வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான வீடு, அதன் அருகே அவரது நிறுவன அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதேபோல, சென்னையில் ஆழ்வாா்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மாா்டின் குடும்பத்தினா் வீடுகள் உள்ளிட்ட சில இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

சோதனையின்போது பாதுகாப்பு பணியில் மத்திய ரிசா்வ் படையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT