அமைச்சர் தங்கம் தென்னரசு 
தமிழ்நாடு

தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை: அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசரின் பால்வளத்துறை, மனோ தங்கராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT