தமிழ்நாடு

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்? முதல்வர் விளக்கம்

நிர்வாகக் காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

DIN


தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசா், நீக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக டி.ஆா்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து டி.ஆா்.பி.ராஜா அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா். 

ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார். 

இதனைத் தொடா்ந்து, புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறையும், நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நிமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் ரூ.20,000 கோடி முதலீட்டில், தொழிற்சாலை நவீனமயமாக்கல், நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின்வாகன மின்கலன் தொகுப்பு, மின்வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கான வசதிகளை செய்து தருவது குறித்து தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்தான இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று முன்னணி தொழில் துறையினரைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்தனர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்றைக்கு தொழில் துறைக்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக முதலீட்டை ஈர்ப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், நிர்வாகக் காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவு, தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்று தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

கடை உரிமையாளரை வெளியே அனுப்பிவிட்டு ரூ. 40 ஆயிரத்தை திருடிய நபர்!

SCROLL FOR NEXT