தமிழ்நாடு

செழிப்பு இயற்கை உரத்தை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

DIN

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். ஈரக்கழிவுகளில் இருந்து  தயாரிக்கப்படும் உரத்திற்கு செழிப்பு என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மாகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிகளையும் கானொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 புதிய விளையாட்டு திடல்கள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னையில் ரூ.561.26 கோடி செலவில் முடிவுற்ற 14 திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான கியூஆர் கோடு மென்பொருள் செயலியை முதல்வர் தொடக்கி வைத்தார்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட 19 பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குடிநீர்  வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.201 கோடி மதிப்புள்ள 9 புதிய பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT