கோப்புப்படம் 
தமிழ்நாடு

செவிலியர்கள் வாழ்வில் ஒளியேற்றிட அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச செவிலியர்கள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

DIN

சர்வதேச செவிலியர்கள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் நாள் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. 

செவிலியர்கள் நாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் செவிலியர் நாள் வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT