முகப்பு
தமிழ்நாடு

திருமாவளவன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
தொல்.திருமாவளவன்.
பகிர்:

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விசிக அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த 10 பேர் தன்னை தாக்கியதாக வேதாஅருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011ல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →