மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

DIN


சென்னை: கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை ரூ.5 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக இது அனுப்பப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT