தமிழ்நாடு

ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்

DIN

ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் பேசியுள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்  ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார். 

ஓபிஎஸ் உடன் பன்ரூட்டி ராமசந்திரன் சென்றது எங்களுக்கு விருப்பமில்லை என்றும், வேறுபட்டு இருக்கிறோம் என்று கருத்தை இபிஎஸ் பேசியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. 

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா - ஏசி சண்முகம் இவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.

டிடிவி தினகரன் ஓபிஎஸ்யும் முதன்முதலாக சந்திப்பதால் கூட்டமாக செல்ல வேண்டாம் என்று நாங்கள் செல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது. வேண்டுமானால் எடப்பாடியை தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT