தமிழ்நாடு

பிச்சாண்டார் கோயில் அருள்மிகு உத்தமர் கோயில் தேர் வெள்ளோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு உத்தமர் திருக்கோயில்.

திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், பிச்சாண்டார் கோயில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ளதுமாகிய திருத்தலம் இந்தியாவிலே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

இத்திருக்கோயிலில் புதிய தேர் செய்யும் பணிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்தது. 

இதனைத் தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டத்திற்கான பூஜைகள். விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், வாஸ்து சாந்தி, விசேஷ ஹோமம் பூஜைகளோடு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணா ஹீ தி பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாத்ரா தானம், கலச அபிஷேகம் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

மேலும் புதிய ரதத்தில் கடம் வைத்த பின்பு பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கயிலாய வாத்தியம், மேள தாள முழங்க திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT