தமிழ்நாடு

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளுக்கு நிலம் வழங்க முன்வர வேண்டும்: டிஆர்பி ராஜா

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்க நிலங்களை வழங்க விவசாயிகள் முன் வரவேண்டும் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 

DIN

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்க நிலங்களை வழங்க விவசாயிகள் முன் வரவேண்டும் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் அளித்தவர். தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். நிச்சயமாக வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினமாக உள்ளது. யாரேனும் நிலத்தை கொடுக்க வந்தால் மிகவும் மிகழ்ச்சி. தொழிற்பேட்டைகள் அமைய பெரிய அளவில் நிலங்கள் தேவையில்லை, சிறிய அளவில் நிலங்கள் இருந்தாலே போதும். விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சிறப்பான திட்டங்கள் வெகு விரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும். அறுவடைக்குப் பிறகு அதனை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். நெல்லை மட்டுமே நாம் நம்பியுள்ளோம். அதனை தவிர்த்து குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து அதனை இங்கேயே மதிப்புக் கூட்டு பொருளாக மாற்ற ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

மூத்த உறுப்பினர்கள் உள்ளபோது, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைப் பற்றிக் கேட்டதற்கு, 'டெல்டாகாரன் என்று முதலமைச்சர் கூறினார். அப்படியானால் நாங்கள் அனைவரும் அமைச்சர்கள்தான். இது எங்கள் அனைவருக்கும் கிடைத்த பதவி' எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் பலத்த மழை: 413 யாத்ரீகா்கள் மீட்பு

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

கோயிலில் ரூ.7.12 லட்சம் திருட்டு: சிறுவன் கைது

72 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை -ஜாா்க்கண்டில் அதிரடி நடவடிக்கை

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

SCROLL FOR NEXT