கோப்புப் படம் 
தமிழ்நாடு

வேலூரில் கடும் வெயில்: மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

கோடைக் காலத்தில் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலால் வேலூரில் தொடர்ந்து 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் நிலவி வருகிறது.

DIN


வேலூர்: வேலூரில் தொடர்ந்து 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் நிலவியதால் மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரம் செய்யும் வியாபாரியான முருகன்(48) பொய்கை அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்ற போது முருகன் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார். அவ்வழியாக வந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் முருகனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த முருகனுக்கு ஏற்கேனவே சர்க்கரை, பி.பி. உள்ளதாலும், அளவுக்கு அதிகமாக சுட்டெரித்து வரும் வெயிலால் முருகன் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT