முகப்பு
தமிழ்நாடு

கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலி

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கடல் அலையில் சிக்கி பலியாகினர்.

Updated On : 17 மே, 2023 at 1:21 PM
கோப்புப்படம்
பகிர்:

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கடல் அலையில் சிக்கி பலியாகினர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுதாவது:

திருவொற்றியூர் சதானந்த புரத்தை சேர்ந்தவர்  ஹரிஷ் (16). இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், ஸ்ரீகாந்த் (19) சந்துரு (20) இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் விளையாடுவதற்காக 7 பேர் திருவொற்றியூர் தாங்கல் அருகே உள்ள கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். 

Advertisement

இதில் ஹரிஷ், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரை அப்பகுதி மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

தொடர்ந்து, சந்துருவை தீயணைப்பு வீரர்கள்  படகுமூலம் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூர் குப்பம் அருகே சந்துருவின் உடல் கரை ஒதுங்கியது. 

இதை அடுத்து காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் பூங்காவனபுரம் நாலாவது தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா வயது (50) என்பவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அதிகாலையில் கடலுக்குச் சென்றுள்ளார். அப்போது ராட்சதலையில் அவர் சிக்கி அவரும் பலியானார்.

2 நாள்களில் 4 பேர் பலியான சம்பவம் வடசென்னை பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.