செந்தில் பாலாஜி 
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

DIN

தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

2020 - 21ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் மின் நுகர்வு 16,481 மெகாவாட்; நடப்பாண்டு ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக மின் அழுத்தம் உள்ள இடங்களை கண்டறிந்து சரிசெய்யப்படும். 

சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  ஒரு சில பகுதிகளில் மின்சாரம் இல்லையெனில் அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறலாம், மின்வெட்டுக்கும் மின் தடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

அதுபோல தமிழ்நாடு முழுவதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அதற்கு தேர்வையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சென்னையின் நேற்றைய 16/05/2023 மின் தேவை இதுவரையில்லாத அளவில் 4016 மெகாவாட் ஆகும். சென்னையில் நேற்று தான் முதன்முறையாக 4000க்கும் கூடுதலான மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 15/05/2023ல் 3991 MW ஆகும். நேற்று சென்னையில் 90.34 மில்லியன் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 15/05/2023 அன்று 84.51 மில்லியன் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT