முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

பெங்களூரு​வில் நடைபெறவுள்ள கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

DIN

பெங்களூரு​வில் நடைபெறவுள்ள கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் துணை முதல்வர் பதவியை டி.கே.சிவகுமார் ஏற்றுக்கொண்டுள்ளார். கர்நாடக முதல்வராக சித்தராமையா ஒருமனதாக தேர்வாகியுள்ளார். 

பெங்களூரு​வில் நாளை மறுநாள் (மே 20) அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT