கோப்புப்படம் 
தமிழ்நாடு

10ம் வகுப்புத் தேர்வு முடிவு: 5வது இடத்தில் தூத்துக்குடி!

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியானது.

DIN

தூத்துக்குடி: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியானது.

இதில் துத்துக்குடி மாவட்டத்தில்  95.58  சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதையடுத்து, தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10,752 மாணவர்கள, 11,249 மாணவிகள் என மொத்தம் 22,001 பேர் தேர்வு எழுதினர். இதில்  10,033 மாணவர்கள்,  10,996 மாணவிகள் என மொத்தம் 21,029 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 95.58 ஆகும்.

இதன்மூலம் தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 5-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் காந்தி

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT