தமிழ்நாடு

புதுச்சேரியில் குறைந்த தேர்ச்சி விகிதம்: ஆய்வு செய்ய குழு - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

DIN

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.05 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 88.85 சதவிகித மாணவர்களும், 93.30 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி அரசு சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% கூடுதல் தேர்ச்சி ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT