தமிழ்நாடு

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!

DIN

தஞ்சாவூர்: உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி தஞ்சை மாவட்டத்தில் இயங்கக்கூடிய பள்ளி பேருந்துகளின் நிலை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

தஞ்சாவூர் கோட்டத்திற்குள்பட்ட 265 வாகனங்கள், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குள்பட்ட 240 வாகனங்கள், கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட 205 வாகனங்கள் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி மூன்று இடங்களில் ஆய்வு நடைபெற்றது.

இதில், பள்ளி பேருந்துகளில் அவசர வழி முறையாக செயல்படுகிறதா?, கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?, தீயணை உபகரணங்கள் உள்ளதா? போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT