தமிழ்நாடு

ரயில் சேவைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

DIN

ரயில்வே டிக்கெட் முன்பதிவு, பார்சல் சேவை உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை  மாற்றிக்கொள்ளலாம்.

ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து சேவைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

ரயில் பயணம் மேற்கொள்ள ரயில்வே நிலையங்களில் கவுன்டர்களில் டிக்கெட் எடுப்பதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ரயில்வே உணவகங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைககளுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT