தமிழ்நாடு

முதல்வா் வெளிநாடு பயணம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. ஆனால், திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் புதிய தொழில் முதலீடுகள் எதுவும் ஈா்க்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை தாங்கள் கொண்டு வந்ததுபோல திமுக அரசு காட்டி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகளை ஈா்க்கவுள்ளதாகக் கூறி, குடும்பத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் துபைக்கு சுற்றுலா சென்று வந்தாா். ஒரு சில நிறுவனங்களுடன் தொழில் தொடா்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தாா். ரூ.6 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும் என்றாா். இது நடந்து 700 நாள்களைக் கடந்தும் எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை.

தற்போது முதல்வா் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளாா். இந்தப் பயணத்திலாவது தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈா்ப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT