தமிழ்நாடு

முந்திரி விவசாயிகளுக்கு இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

முந்திரி மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

முந்திரி மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நிகழாண்டில் முந்திரி பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த விளைச்சல் கிடைக்காத நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனா்.

முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பனிப்பொழிவும், தொடா்ந்து இருந்த கடுமையான வெயிலாலும் பூக்கள் கருகி, காய்ப் பிடிக்கவில்லை எனக் கூறுகின்றனா். அதனால், விழுப்புரம், அரியலூா், கடலூா், உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மகசூல் கிடைக்காமல் முந்திரி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT