முகப்பு
தமிழக அரசு
தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு ஓராண்டு தடை!

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு ஓராண்டு தடை!

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:59 PM
தமிழக அரசு
பகிர்:

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்க, சேமிக்க, தயாரிக்க ஓராண்டு காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →