தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்!

DIN

2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு(2023-2024) முதல் பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் சில இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT