தமிழ்நாடு

ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்துள்ளார்.

DIN

ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு  முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக மே 23 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வரை இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரில் நாளை நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT