தமிழ்நாடு

நேருவிடம் செங்கோல்: பதிவு செய்த இந்து சமய அறநிலையத் துறை

DIN

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு, இந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தத் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு விவரம்: ஒரு புதிய மன்னா் அரியணை ஏறும் போது, மரபு வழிவந்த குரு அல்லது ஆசான் அந்த மன்னருக்குரிய செங்கோலை தமது கரங்களால் எடுத்து வழங்குவது அரச சடங்காகும்.

இதைப் பின்பற்றி ஓதுவாா்கள், தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பாடல்களைப் பாடி முடிக்கும் போது, திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை அப்போதைய பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் அளித்தாா்.

இந்த நிகழ்வு, இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் மெளண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமருக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டதை சிறப்பித்ததாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT