தமிழ்நாடு

உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

DIN

சென்னை, காவேரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டுதல்களுடன் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது பெண் ஒருவா், கடந்த புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க வேண்டி உறவினா்களிடம் கோரிக்கை வைத்தபோது, அவா்கள் அதற்கு முன்வந்தனா்.

இதையடுத்து, இரு நுரையீரல்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அந்தப் பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

இதன் வாயிலாக நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

எந்த ஒரு நபரும் உறுப்பு தானம் அளிக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்தால், தங்களது வாழ்நாளுக்கு பிறகும் பிறருக்கு வாழ்வளிக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT