கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை  ஜூன் 12 ஆம் தேதி  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

DIN

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை  ஜூன் 12 ஆம் தேதி  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சேலத்திற்கு ஜூன் 11 ஆம் தேதி, வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவ சிலையைத் திறந்து, கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைத் தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும்.  

கடந்தாண்டு மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கா்னல் எல்லீசின் முழு உருவச் சிலைக்கு வா்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அணையின் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் கால்வாய் பகுதிகளிலும் உள்ள புதா்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாள்களில் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரொம்ப பார்க்காதீங்க... பூனம் பாண்டே!

புது டிரெண்ட்... வைஷ்ணவி!

கொஞ்சம் ஹைட் அன்ட் ஸீக், கேமராவுக்கு... தமன்னா!

லயோலா கல்லூரி, சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி!

நன்றி என்பது உள்ளொளி... சீரத் கபூர்!

SCROLL FOR NEXT