தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நாளை கேஜரிவால் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார்.

DIN


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார்.

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால்.

இந்நிலையில், ஜப்பானிலிருந்து இன்று சென்னை திரும்பும் தமிழக முதல்வர் ஸ்டாலினை நாளை கேஜரிவால் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீர் அறிவிப்பால் பெரிய பாதிப்பு! வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி!

பாஃப்டா விருதுகள்! ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படம் 14 பிரிவுகளில் பரிந்துரை!

யு19 உலகக் கோப்பை: விஹான் மல்ஹோத்ரா சதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 353 ரன்கள் இலக்கு!

172 சராசரியுடன் விளையாடும் யு19 ஆஸி. வீரர் நிதீஷ் சாமுவேல்!

சமூகத்தில் பின்பற்ற வேண்டிய 10 விதிமுறைகள்!

SCROLL FOR NEXT