தமிழ்நாடு

டிசம்பரில் தமிழகம் வருகிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வரவுள்ளார்.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், டிசம்பரில் ராமேசுவரத்துக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, பாம்பன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியை மோடி திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசுத் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT