தமிழ்நாடு

வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1லட்சத்து 800 போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில், அங்கிருந்த பதிவாளர் பாபுவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.56 ஆயிரமும், ஆவண எழுத்தர் சந்திரசேகர் என்பவரிடமிருந்து ரூ.44 ஆயிரத்து  800 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய போலீசார் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

SCROLL FOR NEXT