முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 120 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனையாகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 காரட் தங்கம்
அதன்படி, சென்னையில் சனிக்கிழமை(நவ.4) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,715-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம்
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.6,235-க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.49,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.