முகப்பு
தமிழ்நாடு

ராசிபுரம் அருகே வனவர் உள்ளிட்ட மூவர் விபத்தில் பலி

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:17 AM
விபத்துக்குள்ளான போலிரோ கார்
பகிர்:

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி மார்த்தாண்டம் ராஜன்(43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் (42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40), உட்பட 3 பேர் சனிக்கிழமை இரவு  கொல்லிமலையில் இருந்து  பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்றனர். 

அப்போது ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து கார்பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும் இந்த பகுதியில் விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →