தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்புப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் கொள்ளளவு 52 அடியாகும்.  தற்போது, கிருஷ்ணகிரி அணையின் மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து வினாடிக்கு 439 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

நீர் வெளியேற்றம் அதிகரிப்பு குறித்து, தென்பெண்ணை ஆறு பாயும் தர்மபுரி, திருவண்ணாமலை,  விழுப்புரம்,  கடலூர் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு பாயும் ஆற்றங்கரை ஓரத்திலும், தாழ்வான பகுதியில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT