தமிழ்நாடு

10வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

DIN

அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவலை 10ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவரது காவல் 10ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு நவ.22 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆவணங்களை வழங்கக் கோரிய அமைச்சரின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT