தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுக்கு தொடா்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
அமைச்சா் வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.
இதையும் படிக்க | முக்குலத்தோா் ஆதரவு யாருக்கு?
இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சா் வேலுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூா் உள்ளிட்ட இடங்களிலுள்ள அவருக்கு தொடா்புடையவா்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையிலுள்ள 5 கல்லூரிகள் உள்பட அமைச்சா் வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நான்காவது நாளாக சோதனை தொடா்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.