தமிழ்நாடு

கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை வென்றார் வைஷாலி!

பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

DIN


பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மகளிா் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ஆவது சுற்றில் அவா், சீனாவின் முன்னாள் மகளிா் உலக சாம்பியனான ஜோங்யி டானை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருந்தார். 

2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன் இருந்து வந்த வைஷாலி, மேலும் 2 புள்ளிகள் பெறும் பட்சத்தில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெறுவாா் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் வைஷாலி. இறுதிப் போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாமியன் பட்டத்தை வென்றார் வைஷாலி.

இதையடுத்து கிராண்ட் மாஸ்டா்களான, உலகின் முதல் உடன்பிறந்தோா் என்ற சாதனையை வைஷாலியும், அவரது சகோதரரான ஆா்.பிரக்ஞானந்தாவும் படைத்துள்ளார்கள். பிரக்ஞானந்தா ஏற்கெனவே கிராண்ட்மாஸ்டராக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மகளிருக்கான செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT