முகப்பு
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை:  நீர்மட்டம் உயர்வு!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 35.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 46.8 மி.மீ., மழையும் பெய்தது. அதன் காரணமாக அணைக்குள் விநாடிக்கு 2,605 கன அடி தண்ணீர் வந்தது. திங்கள்கிழமை கிழமை அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீர்மட்டம் 126.85 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாக இருந்தது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.85 அடி (மொத்த உயரம் 153 அடி), நீர் இருப்பு 4,017 மில்லியன் கன அடி. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 3,605 கன அடியும்,  நீர் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாகவும் இருந்தது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

பெரியாறு அணையில் 35.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 46.8 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.