தமிழ்நாடு

நவ.10-இல் 2 -ஆம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்!

DIN


சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, அக். 25 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

வெள்ளிக்கிழமை (நவ.10) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கிறார்.

உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT